Sunday, July 3, 2011

ஊட்டி சுற்றுலா - 3

ஊட்டி சுற்றுலா - 3

மலைகளின் அரசி எனும் ஊட்டி என்னும் உதகமண்டலம் மதியம் 12:30-க்கு சென்றடைந்தோம். சுமார் 5 1/2 மணிநேர பயணம் இயற்கையின் எழில் எங்கள் பயணத்தை உற்சாகமாக இருக்க செய்தது. 



ஊட்டி ரயில் நிலையத்தில் இருந்து ஒரு தனியார் பேருந்து அமர்த்தி Sun Park என்ற ஹோட்டலில் ரூம் எடுத்தோம். ஒரு மணிநேரத்தில் அங்கேயே உணவகத்தில் மதிய உணவை முடித்துக்கொண்டு வெளிய செல்ல எல்லாரும் தயார் ஆனோம்.


அங்கே அருகில் உள்ள ஊட்டி தாவரவியல் பூங்கா சென்றோம். அங்கு அழகிய பல வண்ண பூக்கள் எங்களை வரவேற்றது.




அங்கு வெகுநேரம் இயற்கையின் அழகை (வண்ண மலர்கள்) ரசித்து பல புகைப்படங்கள் எடுத்துக்கொண்டு மாலை 5:45 மணிக்கு பூங்கா விட்டு வெளியே வந்தோம். கதிரவன் தன் ஒளி கதிர்களை மறைத்து அங்கு ஒரு ரம்மியமான மாலை முடிவுக்கு வந்தது. நாங்கள் எல்லாரும் அங்கிருந்து பொடி நடையாய் ஊட்டி கடை தெருவில் நடந்தோம். அங்கே மகாத்மா காந்தி சிலை அருகே உள்ள தேநீர் விடுதியில் சிலு சிலுவென குளிர் காற்றிற்கு இதமாக மிளகாய் மற்றும் வாழக்காய் பஜ்ஜி சாப்பிட்டு தேனீர் அருந்தினோம்.  பின்னர் தாகசாந்திக்கு தேவையான பொருட்களுடன் எங்கள் ஹோட்டல் வந்தடைந்தோம். இரவு 8 மணிக்கு தொடங்கிய தாகசாந்தி விருந்து 10 மணிக்கு முடிவுக்கு வந்தது. இடையே சுவையான கலந்துரையாடல் நடைபெற்றது. பின்னர் இரவு உணவுக்காகவும், ஊட்டியின் இரவு நேர குளிர் அனுபவிக்கவும் நாங்கள் எல்லாரும் ஹோட்டலை விட்டு சற்று தொலைவில் உள்ள உணவகத்தை தேடிச்சென்றோம். இரவு நேர தட்பவெட்பநிலை அப்போது 16 டிகிரி ஆக இருந்தது. இரவு உணவை முடித்து மறுநாள் செல்லும் இடத்தை உறுதிபடுதிக்கொண்டு அவரவர் அறைக்கு திருப்பினோம்.

பயணங்கள் முடிவதில்லை..........