Sunday, July 3, 2011

ஊட்டி சுற்றுலா - 3

ஊட்டி சுற்றுலா - 3

மலைகளின் அரசி எனும் ஊட்டி என்னும் உதகமண்டலம் மதியம் 12:30-க்கு சென்றடைந்தோம். சுமார் 5 1/2 மணிநேர பயணம் இயற்கையின் எழில் எங்கள் பயணத்தை உற்சாகமாக இருக்க செய்தது. 



ஊட்டி ரயில் நிலையத்தில் இருந்து ஒரு தனியார் பேருந்து அமர்த்தி Sun Park என்ற ஹோட்டலில் ரூம் எடுத்தோம். ஒரு மணிநேரத்தில் அங்கேயே உணவகத்தில் மதிய உணவை முடித்துக்கொண்டு வெளிய செல்ல எல்லாரும் தயார் ஆனோம்.


அங்கே அருகில் உள்ள ஊட்டி தாவரவியல் பூங்கா சென்றோம். அங்கு அழகிய பல வண்ண பூக்கள் எங்களை வரவேற்றது.




அங்கு வெகுநேரம் இயற்கையின் அழகை (வண்ண மலர்கள்) ரசித்து பல புகைப்படங்கள் எடுத்துக்கொண்டு மாலை 5:45 மணிக்கு பூங்கா விட்டு வெளியே வந்தோம். கதிரவன் தன் ஒளி கதிர்களை மறைத்து அங்கு ஒரு ரம்மியமான மாலை முடிவுக்கு வந்தது. நாங்கள் எல்லாரும் அங்கிருந்து பொடி நடையாய் ஊட்டி கடை தெருவில் நடந்தோம். அங்கே மகாத்மா காந்தி சிலை அருகே உள்ள தேநீர் விடுதியில் சிலு சிலுவென குளிர் காற்றிற்கு இதமாக மிளகாய் மற்றும் வாழக்காய் பஜ்ஜி சாப்பிட்டு தேனீர் அருந்தினோம்.  பின்னர் தாகசாந்திக்கு தேவையான பொருட்களுடன் எங்கள் ஹோட்டல் வந்தடைந்தோம். இரவு 8 மணிக்கு தொடங்கிய தாகசாந்தி விருந்து 10 மணிக்கு முடிவுக்கு வந்தது. இடையே சுவையான கலந்துரையாடல் நடைபெற்றது. பின்னர் இரவு உணவுக்காகவும், ஊட்டியின் இரவு நேர குளிர் அனுபவிக்கவும் நாங்கள் எல்லாரும் ஹோட்டலை விட்டு சற்று தொலைவில் உள்ள உணவகத்தை தேடிச்சென்றோம். இரவு நேர தட்பவெட்பநிலை அப்போது 16 டிகிரி ஆக இருந்தது. இரவு உணவை முடித்து மறுநாள் செல்லும் இடத்தை உறுதிபடுதிக்கொண்டு அவரவர் அறைக்கு திருப்பினோம்.

பயணங்கள் முடிவதில்லை..........

Thursday, June 23, 2011

வரதபாளையம் நீர் விழ்ச்சி - பயணம்.

வரதபாளையம் நீர் விழ்ச்சி - பயணம்.

வரதபாளையம் நீர் விழ்ச்சி சென்னையில் இருந்து 95km தொலைவில் உள்ளது. கடந்த ஜனவரி மாதம் 17-ம் தேதி ஞாயிறு அன்று என் அலுவலக நண்பர்கள் 12 பேர் திரு. செந்தில் என்பவரின் தலைமையில் காலை 6:15 மணிக்கு சென்ட்ரல் புறநகர் ரயில் நிலையத்தில் இருந்து அரக்கோணம் செல்லும் மின் தொடர் வண்டியில் திருவெற்றியூர் விம்கோ நகர் ரயில் நிலையம் சென்றடைந்தோம்.





அங்கே செந்தில் வீடு உள்ளது அவர் எங்கள் பயணத்திற்கு தேவையான பிஸ்கட், மிக்சர், குளிர்பானம் மற்றும் குடிநீர் பாட்டில்களுடன் காத்திருந்தார். அங்கே ITC கம்பெனி எதிரில் உள்ள தேனீர் கடையில் தேனீர் அருந்தினோம். சரியாக 7:10 மணிக்கு சூலூர்பேட்டை செல்லும் மின் தொடர் வண்டி வந்தது. அதில் ஏறி அமர்ந்தோம், பயணத்தில் இடையே நானும் சில நண்பர்களும் திரைப்பட பாடல்கள் பாடி மற்றவர்களை மகிழ்விதோம்.



 மணி 9:20 சூளூர்பேட்டை என்ற ரயில் நிலையத்தில் இறங்கினோம். அங்கே சூளூர்பேட்டை நகரத்தின் சாயல் இல்லாமல் இருந்தது, எங்கள் காலை உணவாக இட்டிலி, வடை, தோசை ஒரு சிறிய ஓட்டலில் சாப்பிட்டோம். 


பின்னர் 2 ஷேர் ஆட்டோவில் வரதபாளயம் நீர்விழ்ச்சி நோக்கி எங்கள் பயணம் தொடர்ந்தது, வழியில் தீர்த்தவாரிக்கு தேவையான தீர்த்தங்களை வாங்கிச் சென்றோம். ஒரு அரை மணி நேர பயணத்தில் வரதபாளயம் நீர்விழ்சியின் முகப்பில் சென்று அதற்க்கு மேல் 20 நிமிட நடை பயணத்தில் அருவியின் அருகே சென்றடையிந்தோம்.





 அங்கே நீரில் விளையாடி மகிழ்தோம். அருவியின் சுத்தமான நீர் கண்ணாடி பளிங்கு போல் இருந்தது. இயற்கையின் அழகு எங்களை பரவசபடுதியது.





எல்லாரும் ஆவலுடன் எதிர் பார்த்த தீர்த்தவாரி தொடங்கியது. அங்கே யாரும் எதிர்பார்காத ஒரு ஆச்சர்ய நிகழ்வு நிகழ்ந்தது. எங்கள் குழுவில் இடம் பெற்ற திரு ஜாய்ஸ் எனபவரின் சுயரூபம் தெரிந்தது. நங்கள் எல்லாரும் திரு ஜாய்ஸ் நல்லவர் எந்த கெட்ட பழக்கங்களும் இல்லாதவர் என்று நினைத்திருக்க அவரோ எங்கள் தீர்த்தவாரியில் கலந்து கொண்டார்.

நாங்கள் அதை புகைப்படம் எடுத்து எங்களின் கூட வேலை செய்யும் அவரின் மனைவியிடம் காட்ட திட்டமிட்டோம். ஆனால் எங்கள் சிலரின் வற்புறுத்தல் காரணமாக அந்த செயலை தடுத்தோம். பின்னர் பிரியாணி சாப்பிட்டு மாலை 4:30  மணிவரை நன்றாக நீரில் கும்மாளம் இட்டோம்.




பின்னர் சூளூர்பேட்டை ரயில் நிலையம் வந்தடைந்து 6:30 மணிக்கு சென்னை செல்லும் மின் தொடர் வண்டியில் சென்னை வந்தடைந்தோம்.  இந்த பயணம் எங்கள் எல்லாருக்கும் மகிழ்ச்சியும், புத்துணர்ச்சி ஏற்படுத்தியது என்றால் மிகை இல்லை. இடை இடையே அலுவலக பணி சுமைகளில் இருந்து விடுபட அடிக்கடி இம்மாதிரி சுற்றுலா செல்ல நாங்கள் எல்லாரும் முடிவுசெய்தோம்.

பயணங்கள் முடிவதில்லை.......

Tuesday, June 21, 2011

ஊட்டி சுற்றுலா - 2.

ஊட்டி சுற்றுலா - 2.

மலை ரயில் பயணம் சுகமாய் இருந்தது. வழி எங்கும் இயற்கை தன் அழகை அள்ளி தெளித்திருன்தது. படு பாதாளங்கள். நீர் ஓடை. பல வண்ண பூக்களின் அழகு எங்கள் எல்லார் மனங்களை கொள்ளை அடித்தது.



வழி எங்கும் இயற்கையை ரசித்தபடி ஹில்க்ரோவே என்ற ரயில் நிலையத்தை வந்து அடைந்தோம். அங்கு எங்கள் காலை உணவை முடித்துக்கொண்டோம். அங்கு கிடைத்த போண்டாவும், மிளகாய் பஜ்ஜியும் சூடாகவும் சுவையாகவும் இருந்தது.

பின்னர் வழியில் கேத்தி என்ற ரயில் நிலையத்தில் 10 நிமிடம் ரயில் நின்றது. அந்த ரயில் நிலையத்தில் தான் கமலஹாசன் நடித்த 'மூன்றாம் பிறை' இறுதி காட்சி நடை பெற்றது.






அங்கு நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டோம். பின்னர் lovedale என்ற ரம்மியமான ரயில் நிலையத்தில் சில புகைப்படங்கள் எடுத்து கொண்டோம். 





பயணகள் முடிவதில்லை....

Sunday, June 19, 2011

ஊட்டி சுற்றுலா

ஊட்டி சுற்றுலா - 1

என் அலுவலகத்தில் பணிபுரியும் நண்பர்கள் 13 பேர் ஊட்டி சுற்றுலா செல்ல முடிவு செய்தோம். எங்கள் குழு தலைவராக திரு. ராஜாசேகர் பொறுப்புபேற்றிருந்தார். தலைக்கு ரூபாயில் 2,500 பயண செலவுக்கும் ஊட்டியில் தங்குவதற்கும் முன்பணம் பெற்றுக்கொண்டார். பயண தேதி 09-06-2011 நீலகிரி விரைவு தொடர் வண்டியில் மேட்டுபாளையம் வரையிலும் அங்கிருந்து மலை தொடர் வண்டியில் உதகமண்டலம்(ஊட்டி) செல்ல முன்பதிவு செய்து கொண்டோம். பயண நாள் அன்று நான் மட்டும் சென்னை சென்ட்ரலில் நிலையத்திற்கு  நீலகிரி விரைவு தொடர் வண்டி புறப்பட பத்து நிமிடங்கள் முன்பு அவசர அவசரமாக சென்றடைந்தேன். நண்பர்கள் அனைவரும் என்னை திட்டிகொண்டே காத்திருந்தார்கள். சரியாக இரவு 9 மணிக்கு வண்டி புறப்பட்டு காலை 6:15 மணியளவில் மேட்டுபாளையம் சென்றடைந்தோம்.

அங்கே சென்றவுடன் சிறிது ஒய்வு எடுத்து கொண்டோம். இரயில் நிலையத்திலேயே அருமையான தேனீர் பருகி விட்டு மலை ரயில் புறப்பட காத்திருந்தோம்.


இரயில் புறபடுவதற்கு முன்பு நாங்கள் கண்ட காட்சி எங்களுக்கு தாய்மையின் பேரன்பை உணர்த்தியது.



சற்று நேரத்தில் மலை இரயிலின் என்ஜின் வந்து சேர்ந்தது. சரியாக காலை 7:10 மணிக்கு எங்கள் மலை இரயில் உதகையை நோக்கி பயணம் இனிதே தொடர்ந்தது.


கிறுக்கனின் பயணம் மேலும் தொடரும்...