ஊட்டி சுற்றுலா - 1
அங்கே சென்றவுடன் சிறிது ஒய்வு எடுத்து கொண்டோம். இரயில் நிலையத்திலேயே அருமையான தேனீர் பருகி விட்டு மலை ரயில் புறப்பட காத்திருந்தோம்.
இரயில் புறபடுவதற்கு முன்பு நாங்கள் கண்ட காட்சி எங்களுக்கு தாய்மையின் பேரன்பை உணர்த்தியது.
சற்று நேரத்தில் மலை இரயிலின் என்ஜின் வந்து சேர்ந்தது. சரியாக காலை 7:10 மணிக்கு எங்கள் மலை இரயில் உதகையை நோக்கி பயணம் இனிதே தொடர்ந்தது.
என் அலுவலகத்தில் பணிபுரியும் நண்பர்கள் 13 பேர் ஊட்டி சுற்றுலா செல்ல முடிவு செய்தோம். எங்கள் குழு தலைவராக திரு. ராஜாசேகர் பொறுப்புபேற்றிருந்தார். தலைக்கு ரூபாயில் 2,500 பயண செலவுக்கும் ஊட்டியில் தங்குவதற்கும் முன்பணம் பெற்றுக்கொண்டார். பயண தேதி 09-06-2011 நீலகிரி விரைவு தொடர் வண்டியில் மேட்டுபாளையம் வரையிலும் அங்கிருந்து மலை தொடர் வண்டியில் உதகமண்டலம்(ஊட்டி) செல்ல முன்பதிவு செய்து கொண்டோம். பயண நாள் அன்று நான் மட்டும் சென்னை சென்ட்ரலில் நிலையத்திற்கு நீலகிரி விரைவு தொடர் வண்டி புறப்பட பத்து நிமிடங்கள் முன்பு அவசர அவசரமாக சென்றடைந்தேன். நண்பர்கள் அனைவரும் என்னை திட்டிகொண்டே காத்திருந்தார்கள். சரியாக இரவு 9 மணிக்கு வண்டி புறப்பட்டு காலை 6:15 மணியளவில் மேட்டுபாளையம் சென்றடைந்தோம்.
அங்கே சென்றவுடன் சிறிது ஒய்வு எடுத்து கொண்டோம். இரயில் நிலையத்திலேயே அருமையான தேனீர் பருகி விட்டு மலை ரயில் புறப்பட காத்திருந்தோம்.
இரயில் புறபடுவதற்கு முன்பு நாங்கள் கண்ட காட்சி எங்களுக்கு தாய்மையின் பேரன்பை உணர்த்தியது.
சற்று நேரத்தில் மலை இரயிலின் என்ஜின் வந்து சேர்ந்தது. சரியாக காலை 7:10 மணிக்கு எங்கள் மலை இரயில் உதகையை நோக்கி பயணம் இனிதே தொடர்ந்தது.
கிறுக்கனின் பயணம் மேலும் தொடரும்...
No comments:
Post a Comment