Thursday, June 23, 2011

வரதபாளையம் நீர் விழ்ச்சி - பயணம்.

வரதபாளையம் நீர் விழ்ச்சி - பயணம்.

வரதபாளையம் நீர் விழ்ச்சி சென்னையில் இருந்து 95km தொலைவில் உள்ளது. கடந்த ஜனவரி மாதம் 17-ம் தேதி ஞாயிறு அன்று என் அலுவலக நண்பர்கள் 12 பேர் திரு. செந்தில் என்பவரின் தலைமையில் காலை 6:15 மணிக்கு சென்ட்ரல் புறநகர் ரயில் நிலையத்தில் இருந்து அரக்கோணம் செல்லும் மின் தொடர் வண்டியில் திருவெற்றியூர் விம்கோ நகர் ரயில் நிலையம் சென்றடைந்தோம்.





அங்கே செந்தில் வீடு உள்ளது அவர் எங்கள் பயணத்திற்கு தேவையான பிஸ்கட், மிக்சர், குளிர்பானம் மற்றும் குடிநீர் பாட்டில்களுடன் காத்திருந்தார். அங்கே ITC கம்பெனி எதிரில் உள்ள தேனீர் கடையில் தேனீர் அருந்தினோம். சரியாக 7:10 மணிக்கு சூலூர்பேட்டை செல்லும் மின் தொடர் வண்டி வந்தது. அதில் ஏறி அமர்ந்தோம், பயணத்தில் இடையே நானும் சில நண்பர்களும் திரைப்பட பாடல்கள் பாடி மற்றவர்களை மகிழ்விதோம்.



 மணி 9:20 சூளூர்பேட்டை என்ற ரயில் நிலையத்தில் இறங்கினோம். அங்கே சூளூர்பேட்டை நகரத்தின் சாயல் இல்லாமல் இருந்தது, எங்கள் காலை உணவாக இட்டிலி, வடை, தோசை ஒரு சிறிய ஓட்டலில் சாப்பிட்டோம். 


பின்னர் 2 ஷேர் ஆட்டோவில் வரதபாளயம் நீர்விழ்ச்சி நோக்கி எங்கள் பயணம் தொடர்ந்தது, வழியில் தீர்த்தவாரிக்கு தேவையான தீர்த்தங்களை வாங்கிச் சென்றோம். ஒரு அரை மணி நேர பயணத்தில் வரதபாளயம் நீர்விழ்சியின் முகப்பில் சென்று அதற்க்கு மேல் 20 நிமிட நடை பயணத்தில் அருவியின் அருகே சென்றடையிந்தோம்.





 அங்கே நீரில் விளையாடி மகிழ்தோம். அருவியின் சுத்தமான நீர் கண்ணாடி பளிங்கு போல் இருந்தது. இயற்கையின் அழகு எங்களை பரவசபடுதியது.





எல்லாரும் ஆவலுடன் எதிர் பார்த்த தீர்த்தவாரி தொடங்கியது. அங்கே யாரும் எதிர்பார்காத ஒரு ஆச்சர்ய நிகழ்வு நிகழ்ந்தது. எங்கள் குழுவில் இடம் பெற்ற திரு ஜாய்ஸ் எனபவரின் சுயரூபம் தெரிந்தது. நங்கள் எல்லாரும் திரு ஜாய்ஸ் நல்லவர் எந்த கெட்ட பழக்கங்களும் இல்லாதவர் என்று நினைத்திருக்க அவரோ எங்கள் தீர்த்தவாரியில் கலந்து கொண்டார்.

நாங்கள் அதை புகைப்படம் எடுத்து எங்களின் கூட வேலை செய்யும் அவரின் மனைவியிடம் காட்ட திட்டமிட்டோம். ஆனால் எங்கள் சிலரின் வற்புறுத்தல் காரணமாக அந்த செயலை தடுத்தோம். பின்னர் பிரியாணி சாப்பிட்டு மாலை 4:30  மணிவரை நன்றாக நீரில் கும்மாளம் இட்டோம்.




பின்னர் சூளூர்பேட்டை ரயில் நிலையம் வந்தடைந்து 6:30 மணிக்கு சென்னை செல்லும் மின் தொடர் வண்டியில் சென்னை வந்தடைந்தோம்.  இந்த பயணம் எங்கள் எல்லாருக்கும் மகிழ்ச்சியும், புத்துணர்ச்சி ஏற்படுத்தியது என்றால் மிகை இல்லை. இடை இடையே அலுவலக பணி சுமைகளில் இருந்து விடுபட அடிக்கடி இம்மாதிரி சுற்றுலா செல்ல நாங்கள் எல்லாரும் முடிவுசெய்தோம்.

பயணங்கள் முடிவதில்லை.......

1 comment:

  1. போதையில் நீர்நிலைகளில் விளையாடுவது ஆபத்தானது. எதிர்காலத்தில் பார்த்து பத்திரமா இருந்துகிடுங்க. குழுவில் ஒருவராவது D.S.P-யா அதாவது designated sober person-ஆ இருக்கணும்.

    ReplyDelete